ஒன்றுபட்டு நிற்போம் வென்றுகாட்டியே தீருவோம்... மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

’மக்களவைத் தேர்தலில் 40-ம் நமதே, நாடும் நமதே என்ற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திட அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்’ என திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, தொகுதி பங்கீடுகளையும் நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அதில், ‘இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்கவும் மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள ஜனநாயகத்தை மீட்கவும் இந்தியா கூட்டணியை மக்களவைத் தேர்தல் களத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த ஒரே இலக்குடன் திமுகவுடன் இணைந்திருக்கும் தோழமை கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத, மாநில உரிமைகளை பறித்த ஆட்சியை விரட்டிட வேண்டும். இதற்கு 2024 மக்களவைத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும். இந்த உறுதியான நம்பிக்கையோடு இந்தியா கூட்டணிக்கு தோள் கொடுக்க தோழமைக் கட்சிகளுடன் களத்தை சந்திக்கிறோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உருவான, கூட்டணி 5-வது முறையாக கொள்கை அடிப்படையில் வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி தொகுதி பங்கீடுகளை செய்யும் ஜனநாயக பூர்வமான நடைமுறையை திமுக தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்கு தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தை தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையும், கூட்டணியின் வலிமையும் கருத்தில் கொண்டு இது குறித்து அனைத்து தோழமை இயக்கங்களிடமும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து உளப்பூர்வமாக ஆதரவை நல்கிட வேண்டும். இந்த அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை முடிவு எடுத்திருப்பது ஆக்கபூர்வமான ஜனநாயக பண்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திட வேண்டும். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிட அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம். வென்று காட்டியே தீருவோம்’ என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!

வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!

சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!

பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in