ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முழக்கம்: சட்டப்பேரவைக்குள் பரபரப்பு

ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் முழக்கம்: சட்டப்பேரவைக்குள் பரபரப்பு

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினர் முழக்கமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் தனது உரையை தமிழில் ஆற்றத் தொடங்கினார். அப்போது ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உறுப்பினர்கள் அவையில் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஆளுநர் தமிழில் உரையாற்றி கொண்டிருந்தார். சட்டப்பேரவையில் எனது உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை கூறுகிறேன் என்றும் கூறினார்.

அப்போது தமிழ்நாட்டை தமிழகம் என்று கூறிய ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஆளுநர் தனது உரையை படித்துக் கொண்டு இருந்தார். காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனர். எங்கள் நாடு தமிழ்நாடு என்று அவர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனர். அவைத் தலைவர் அப்பாவு அவர்களை அமரும்படி செய்கை மூலம் கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்பேரவை பரபரப்புடன் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆளுநரை உரையை புறக்கணித்துவிட்டு திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக அவர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் முழக்கமிட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in