சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி

சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக கூட்டணி

சென்னை மாநகராட்சியில் இதுவரை அறிவிக்கப்பட்ட இடங்களில் 107 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றிவிட்டது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 21 மாநகராட்சியும் அடங்கும். அனைத்து மாநகராட்சியும் திமுக கைப்பற்றும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருந்தார். இதற்கு ஏற்றார் போல் அனைத்து மாநகராட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் இருக்கின்றன. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி திமுக கூட்டணி 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல வார்டுகளில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றி விட்டதே என்றே செல்லலாம். 101 வார்டுகளில் வெற்றி பெற்றாலே மாநகராட்சியை கைப்பற்றிவிடலாம். திமுக கூட்டணி இதுவரை 107 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடன் மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு பட்டியலின பெண்ணே மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். துணை மேயர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in