தொண்டர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்: புத்தாண்டு பரிசு வழங்கிய பிரேமலதா

தொண்டர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்: புத்தாண்டு பரிசு வழங்கிய பிரேமலதா

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜயகாந்த், கட்சித் தொண்டர்களைச் சந்தித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மைக்காலமாக உடல்நலம் குன்றிய நிலையில் உள்ளார். எலும்பும், தோலுமாக அவர் உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ளகட்சி தலைமை அலுவலகத்தில் தன் கட்சித் தொண்டர்களையும், ரசிகர்களையும் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தேதிமுக கட்சி அலுவலகத்தின் முன்பு அக்கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் குஷன் வசதி கொண்ட வீல் சேரில் விஜயகாந்த் வந்தார். அப்போது தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் தன் இருகைகளையும் உயர்த்திக் காட்டினார். தொடர்ந்து வந்திருந்த தொண்டர்களை வரவேற்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். ரசிகர்கள் தொடர்ந்து " கேப்டன் வாழ்க..வாழ்க" என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கூட்டமாக வந்து குவிந்திருந்த கட்சியினருக்கு புத்தாண்டு பரிசுத் தொகையினையும் பிரேமலதா வழங்கினார். ஆனால், இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. அவரது இருமகன்களும் அவரது இருக்கையின் இருபுறமும் அவரை லேசாக பிடித்தவாறே இருந்தனர். அவர் உடல் நலிவுற்ற நிலையில் இருந்தது. இது தொண்டர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in