வீடியோ; மேடையில் குத்தாட்டம் போட்ட தேமுதிக நிர்வாகிகள்!

மேடையில் குத்தாட்டம் போட்ட தேமுதிக நிர்வாகிகள்
மேடையில் குத்தாட்டம் போட்ட தேமுதிக நிர்வாகிகள்

நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நலத்திட்ட உதவி வழங்கல்
நலத்திட்ட உதவி வழங்கல்

நடிகர் விஜயகாந்த் கடந்த 2005 ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை  ஆரம்பித்தார். 2006 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திற்குள் சென்றார். அதன் பிறகு 2011 -ம் ஆண்டு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த காலக்கட்டத்தில் அதிக இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று தமிழ்நாடு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

அதன் பின்னர் விஜயகாந்தின் செயல்பாடுகளாலும், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும் தேமுதிகவுக்கு தமிழக அரசியலில் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் 71 வது பிறந்தநாள் விழா தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த  ஆகஸ்ட் 25- ம் தேதி கொண்டாடப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதே போல விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிகவின் 19-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியின் இறுதியில் விஜயகாந்த் படப் பாடலுக்கு தேமுதிக நிர்வாகிகள் மேடையில் குத்தாட்டம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in