கட்சி சின்னத்துடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்த தேமுதிக வேட்பாளர்: ஈரோடு இடைத்தேர்தலில் பரபரப்பு

தேமுதிக வேட்பாளர் ஆனந்த்
தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி சின்னத்துடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்த தேமுதிக வேட்பாளர்: ஈரோடு இடைத்தேர்தலில் பரபரப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் கட்சி வேட்டி, துண்டுடன் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் கட்சி துண்டு, வேட்டியை மாற்றிவிட்டு அவர் வந்ததால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படடது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்யிடுகின்றனர்.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வெப் கேமிராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது, அவர் தேமுதிக கட்சி துண்டு, வேட்டியுடன் வந்ததால் அவரை வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்திவிட்டார் இதனால், தேர்தல் அதிகாரியிடன் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என்று தேர்தல் அதிகாரி அவரிடம் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கட்சி அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சி துண்டு, வேட்டியை மாற்றிவிட்டு அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கை பதிவு செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in