பசும்பொன் தேவர் குருபூஜை... அதிரடி கட்டுப்பாடுகளை அறிவித்தார் ஆட்சியர்!

பசும்பொன் தேவர் நினைவிடம்
பசும்பொன் தேவர் நினைவிடம்
Updated on
1 min read

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வோர்  அரசின் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அக்டோபர் 30 ம் தேதி நடைபெற உள்ள பசும்பொன்  முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்  இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார். பல்வேறு அமைப்புகள்,  பிரதிநிதிகள் இதில்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேவர் ஜெயந்தியின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின்னர்  கலெக்டர் விஷ்ணு சந்திரன்  செய்தியாளர்களிடம் பேசினார். "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் எந்த ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும்  ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு விதமான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அனைவரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான மக்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவதை முன்னிட்டு  அந்த மக்களும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பல்வேறு விதமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டு பேனர் வைப்பதை தடுத்திடவும்,  அரசு கட்டிடங்களில் விளம்பரம் செய்வதை தவிர்த்திடவும் வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், காவல்துறை மற்றும்  வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி நிகழ்ச்சி சிறப்பாக நடந்திட  உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று  கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.


இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in