உத்தரப்பிரதேசத்தில் கழிவறையில் கபடி வீரர்களுக்கு உணவு விநியோகம்: அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை

உத்தரப்பிரதேசத்தில் கழிவறையில் கபடி வீரர்களுக்கு  உணவு  விநியோகம்:  அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 16-ம் தேதி ஷகாரன்பூரில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. அப்போது கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டது. கழிவறை பகுதியில் இருந்து வீராங்கனைகள் சாப்பாட்டை எடுத்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கழிவறையில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரிசி மற்றும் காய்கறிகளை எடுத்து செல்லப்படுவதை வீடியோக்களில் காட்டப்படுகிறது. 1 நிமிட வீடியோவில்,சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்கள் காட்டப்படுகிறது அதன் அருகே கழிப்பறைத் தரையில் வைக்கப்பட்டுள்ள சாப்பாடு காண்பிக்கப்படுகிறது. மீண்டும் விளையாட்டு வீரர்கள் உணவை எடுத்துக்கொண்டு கழிப்பறைக்கு வெளியே செல்கின்றனர். மற்றொரு வீடியோவில், ஊழியர்கள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, உணவு சமைக்கப்படும் நீச்சல் குளத்தின் அருகே வெளியே கொண்டு வருவதைக் காட்டுகிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து சஹாரன்பூரின் விளையாட்டுத்துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனா பணியிடை நீக்கம் செய்யப்படடுள்ளார். இடநெருக்கடி காரணமாக உணவு மாற்று அறையில் வைக்கப்பட்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மாற்று அறையென்பது கழிப்பறையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, விளையாட்டு வீரர்களுக்கு உணவு வழங்கும் விஷயத்தில் அலட்சியத்தைக் கடைபிடித்ததாக அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in