‘இந்தியா’ கூட்டணியில் குழப்பம்... ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பால் சலசலப்பு!

காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

வரும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் டெல்லி மாநில தலைவர் பேசியிருப்பது ’இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் - கார்கே - கெஜ்ரிவால்
ராகுல் - கார்கே - கெஜ்ரிவால்

மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகள் பாஜகவை வீழ்த்த ‘இந்தியா’ என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ளனர். காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டம் பாட்னா மற்றும் பெங்களூரில் நடந்துள்ளன.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை, 18 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்கு பின் டெல்லி காங்கிரஸ் தலைவர் லம்பா, ‘’டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும்படி தங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், 2024 தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் உடனடியாக பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து தொண்டர்களும் தயாராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

டெல்லி காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சு ஆம் ஆத்மி கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி, கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டால் இந்தியா கூட்டணி தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு உடனடியாக பதிலளித்த டெல்லி காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் தீபக் பபாரியா, ‘’கூட்டத்தில் சீட் பகிர்வு குறித்து ஆலோசிக்கப்படவில்லை. கட்சியை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே பேசப்பட்டது’’ என்றார். எனினும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சில நடவடிக்கைகள், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in