மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மகாராஷ்டிரா அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை ஜூலை 11-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேனா கட்சிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 38 பேர் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதாகக் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அம்மாநில துணை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தொடங்கினார். துணை சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மகாராஷ்டிரா அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை ஜூலை 11-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், சிவசேனா கட்சி மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்களான 40-க்கு மேற்பட்ட சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அசாமின் கவுகாத்தியில் ஓரு ஹோட்டலில் தங்கியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா முழுவதும் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலங்கள், அவர்களின் வீடுகளைச் சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். இதன் தொடர்ச்சியாக போராட்டம் வெடித்து வருவதால், மும்பை, தானே உள்ளிட்ட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in