தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது: டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது - டிடிவி தினகரன்

``மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு, வேளாண்துறை சார்ந்த சிறப்பு திட்டங்கள் வரவேற்கத்தக்க அம்சங்களாக இருந்தாலும் மூத்த குடிமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறப்பு ரயில்வே கட்டண சலுகை திரும்ப வழங்காதது, தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது'' என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, வேளாண்துறைக்கு சிறப்புத்திட்டங்கள் வரவேற்கத்தக்க அம்சங்களாக இருந்தாலும், உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் பொருளாதாரத் தேக்க நிலை மற்றும் வேலையிழப்புகள் இந்தியாவை பாதிக்காதப்படி எதிர்க் கொள்வதற்கான செயல்த்திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பிரதமரின் வீடுக்கட்டும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது. கடந்த ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் நடந்த முறைக்கேடுகள் இந்த ஆண்டு நடைபெறாதவாறு சரிச் செய்ய வேண்டியது அவசியமானது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு, தோட்டக்கலை துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நெல்லுக்கான கொள்முதல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. புதிதாக ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், 157 நர்சிங் கல்லூரி ஆரம்பித்தல் போன்றவை பாராட்டத்தக்கது.

மூத்தக் குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்பு ரயில்வே கட்டண சலுகையை திரும்ப வழங்காததும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புத் தொடர்ந்து வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கான செயல்திட்டம் இல்லாததும், நேரடி வேலைவாய்ப்பை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் இல்லாததும், தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் தனது பதிலுரையில் அளித்திட வேண்டும் ‘’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in