’பகாசூரன்’ திரைப்படத்தின் போஸ்டர்களை சாலைகளில் ஒட்டிய இயக்குநர் மோகன்!

பகாசூரன்
பகாசூரன்போஸ்டர்களை சாலைகளில் ஒட்டிய இயக்குநர் மோகன்!

செல்வராகவன் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் போஸ்டர்களை சென்னை வீதிகளில் அப்படத்தில் இயக்குநர் மோகன் ஜியே ஒட்டியுள்ளார். அவர் தெருக்களில் போஸ்டர் ஒட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டுவருகிறது.

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன்.ஜி. இவர் இயக்கத்தில் கடந்த 17ம் தேதி ‘பகாசூரன்’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, கே.ராஜன் , கூல் சுரேஷ், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பகாசூரன்
பகாசூரன்போஸ்டர்களை சாலைகளில் ஒட்டிய இயக்குநர் மோகன்!

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஃபரூக் பாட்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆன்லைன் ஆப்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in