ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்: அனைவரையும் ஒருங்கிணைக்கப் போவதாக பேட்டி

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்:  அனைவரையும் ஒருங்கிணைக்கப் போவதாக பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் இன்று இணைந்தார்.

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் விவகாரங்களால் கட்சி இரண்டுபட்டுக் கிடக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொட்ர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்ம நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் இன்று சந்தித்து அவரது அணியில் இணைந்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் அப்போது, அங்கு வந்த கே. பாக்யராஜ் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், பாக்யராஜ் அதிமுகவில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " முன்னாள் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விட்டு சென்றதைப்போல் மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுக பலப்படுத்த வேண்டும். அதற்கு அதிமுகவில் இணைந்து நானும் பங்காற்ற உள்ளேன். தேவை ஏற்பட்டால் நானே நேரில் சென்று அனைவரையும் ஒருங்கிணைக்க பாடுபடுவேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in