ஓபிஎஸ்ஸின் நீலிக்கண்ணீரை நாங்கள் நம்பத்தயாராக இல்லை- திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்

திண்டுக்கல் சீனிவாசன் - ஓபிஎஸ்
திண்டுக்கல் சீனிவாசன் - ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த மாதிரி பல நீலிக்கண்ணீர் நாடகங்களை பார்த்துள்ளோம்; அவரின் நாடகத்தை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் கடந்த 25ம் தேதி வங்கியிலிருந்து பசும்பொன்னுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வங்கியில் ஒப்படைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடத்தில் தங்கக் கவசத்தை ஒப்படைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டது எங்களுக்கு தெரியாது. ஊடகத்தின் வாயிலாகத் தான் பிரச்சினை தெரியவந்துள்ளது. எதோ இரண்டு காவாலி பயலுக கல்லைவிட்டு எறிந்து இருப்பான்கள். பசும்பொன் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்வருக்கு வழங்கிய பாதுகாப்பு போல் உரிய பாதுகாப்பு காவல்துறையால் கொடுக்கப்படவில்லை.

முதல்வர் சென்ற பிறகு காவல்துறையிடம் கட்டுப்பாடு அங்கு இல்லை. அதனால் தான் அச்சம்பவம் நடந்துள்ளது. பவுன்சர்களின் பாதுகாப்புடன் தான் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு வந்தார். காவல்துறை திட்டமிட்டு எங்களுக்கு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை'' என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி பிரதமராக தகுதி உள்ளதாக செய்தியாளர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டதற்கு சிரித்து இருக்கிறார் என செய்தியாளர் கேட்டதற்கு, அண்ணாமலையிடம் செய்தியாளர் கேட்ட கேள்வியே மிக கேவலமான கேள்வி. அதிமுகவின் இலக்கு 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவது தான்.

ஓ.பன்னீர்செல்வம் ஏன் இரட்டை இடம் போடுகிறார். தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையும் கிள்ளி விடுகிறார். இந்த நாடகம் எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது. அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் வேஷம் எடுபடாது. ஓபிஎஸ் ஏற்கெனவே பல தோல்விகளை சந்தித்துள்ளார். வாகனத்தின் மீது யார் கற்களை எறிந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் மகாத்மா காந்தியை போல் ஓபிஎஸ்ஸை ஒப்பிட வேண்டாம். ஏற்கெனவே ஓபிஎஸ்ஸிடம் இந்த மாதிரி பல நீலிக்கண்ணீர் நாடகங்களை பார்த்து உள்ளோம். ஓபிஎஸ்ஸின் நாடகத்தை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. அப்படி நம்பினால் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டது சரிதான் என்பது போல் ஆகிவிடும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in