திக்விஜய் சிங்கும் களமிறங்கினார் - சூடு பிடிக்கிறது காங்கிரஸ் தலைவர் தேர்தல்

திக்விஜய் சிங்கும் களமிறங்கினார் - சூடு பிடிக்கிறது காங்கிரஸ் தலைவர் தேர்தல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் இன்று வேட்புமனுக்களை வாங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங் இதுவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து கருத்து எதுவும் தெரிக்காமல் இருந்தார். நேற்று அவர், "நான் இது தொடர்பாக யாருடனும் பேசவில்லை, கட்சியின் உயர்மட்டத்திடமும் அனுமதி கேட்கவில்லை" என தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் பரபரப்பு திருப்பமாக திக்விஜய் சிங் இன்று காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை வாங்குவதற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேட்புமனுவை வாங்க இங்கு வந்துள்ளேன். நாளை வேட்புமனுவைத் தாக்கல் செய்வேன். தேர்தலில் மும்முனைப் போட்டியா அல்லது இருமுனைப் போட்டியா என்பதை அறிவதற்கு வாபஸ் பெறும் தேதியான அக்டோபர் 4 வரை காத்திருங்கள்" என்று கூறினார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

75 வயதான மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், அசோக் கெலாட்டைப் போலவே காந்தி குடும்பத்தின் நீண்டகால விசுவாசி ஆவார். அசோக் கெலாட்தான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்ற நிலை இருந்தது. ஆனால் ராஜஸ்தான் முதல்வர் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் அசோக் கெலாட் மீது தலைமை அதிருப்தியில் உள்ளது. இந்த சூழலில்தான் திக்விஜய் சிங் இந்த ரேஸில் இணைந்துள்ளார்.

ஆனாலும் காங்கிரஸில் உள்ள ஒரு பிரிவினர், அசோக் கெலாட் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறி வருகின்றனர். இன்று சோனியா காந்தியுடனான அசோக் கெலாட்டின் சந்திப்பை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியான நிலையில், திக் விஜய் சிங் அல்லது அசோக் கெலாட்டில் யார் களமிறங்குவார்கள் என்றும், ஒருவேளை மும்முனை போட்டியாக அமையுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in