ஈபிஎஸ் சாதனையை விளக்கி டிஜிட்டல் திண்ணைப் பிரச்சாரம்: அதிமுகவின் அடுத்த வியூகம்

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனையை விளக்கி கிராம பகுதிகளில் டிஜிட்டல் திண்ணைப் பிரச்சாரம் செய்ய அதிமுக புதிய வியூகத்தை வகுத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக தனது வியூகத்தை அமைக்க தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக அமைப்பு வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தல் வியூகங்கள் அமைக்கும் பணிகளை அதிமுக மேற்கொண்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட மக்கள் நலன் திட்டங்கள் மற்றும் திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்தும் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் திண்ணைப் பிரச்சாரத்தை அதிமுக முன்னெடுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கொண்டு வருவது, கிராம புறங்களில் டிஜிட்டல் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in