
மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பிரதமர் மோடி இருக்கும் போது, துணை வேந்தராக முதல்வர் ஏன் இருக்கக் கூடாது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் பாஜக உறுப்பினர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.
இந்த தனித்தீர்மானத்தின் மீது பேசிய பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’1998ம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர்களே நியமனம் செய்யலாம் என முன்னாள் முதல்வர் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்’’ என குறிப்பிட்டார்.
உடனடியாக குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின் ’’அப்போது இருந்த ஆளுநர்கள் துணை வேந்தர் நியமனத்தில் தன்னிச்சையாக முடிவு எடுத்ததில்லை. ஆனால் தற்போது இருக்கக் கூடிய ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதுதான் பிரச்சனை’’ என கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘’ மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒருவர் துணைவேந்தராக இருக்க முடியாது என்பதால் துணை வேந்தர் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி எப்படி செயல்படுகிறார்.
அதேபோல, குஜராத்தில் முதலமைச்சர்தான் வேந்தராக இருக்கிறார். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர் பரிந்துரைப்பவர்கள் தான் துணைவேந்தர்களாக உள்ளனர்’’ என குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து முதல்வரின் தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தவாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!
சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!
அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!
குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!