ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா பிரதமர் மோடி? - ட்விட்டரில் நடந்த களேபரம்!

ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா பிரதமர் மோடி? - ட்விட்டரில் நடந்த களேபரம்!

நேற்று முன்தினம் நடந்த பிரிவு உபசார விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வணக்கம் செலுத்தும்போது, பிரதமர் மோடி வணக்கம் செலுத்தாதது போன்ற வீடியோவை எதிர்க்கட்சிகள் வெளியிட்டு வைரல் ஆக்கின. ஆனால் பிரதமர் மோடி வணக்கம் செலுத்தும் முழு வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரோஹன் குப்தா ஆகியோர் பிரிவு உபசார விழாவின் போது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவிக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி கேமராக்களை பார்ப்பது போன்ற வீடியோவை பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ட்விட்டர் அந்த பதிவுக்கு சிவப்புக் கொடி காட்டி இந்த வீடியோ தவறாக வழிநடத்துவதாக குறிப்பிட்டது. ஆம் ஆத்மி தலைவர் வெளியிட்ட வீடியோ ட்வீட்டிற்குக் கீழே அசல் வீடியோ மற்றும் புகைப்படத்தையும் ட்விட்டர் காட்டுகிறது.

முன்னதாக ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி குறித்து ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் பகிர்ந்த வீடியோவில், “எப்படிப்பட்ட அவமானம் வெரி ஸாரி சார். இவர்கள் இப்படித்தான், உங்கள் பதவிக்காலம் முடிந்துவிட்டது, இப்போது உங்களை பார்க்கவே மாட்டார்கள்" என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலடியாக பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு வணக்கம் தெரிவிக்கும் வீடியோ கிளிப்பினை பகிர்ந்த பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, "போலி செய்தி வியாபாரி சஞ்சய் சிங் மீண்டும் அதில் ஈடுபட்டுள்ளார். யாருடைய (கேஜ்ரிவால் முதல் சிசோடியா வரை) பொய்கள் ஒவ்வொரு நாளும் அம்பலப்படுகின்றன என்று மக்களுக்கு தெரியும். இப்படி இருந்தால் மக்களால் எப்படி மதிக்கப்படுவீர்கள்” என தெரிவித்துள்ளார்.

பிரிவு உபசார விழாவில் நடந்த சம்பவங்கள் குறித்த இரு தரப்பின் வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in