‘அப்படியா சொன்னாரு அமித் ஷா?’ : 'ஷாக்'காக கேட்ட டிடிவி!

‘அப்படியா சொன்னாரு அமித் ஷா?’ : 'ஷாக்'காக கேட்ட  டிடிவி!

" இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் இந்தி மொழி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாகப் படித்தேன். மற்றப்படி ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழி என அவர் கூறியதாக எனக்குத் தெரியவில்லை" என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூரை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் அவர்களது மொழியில் பேசுகின்றனர். இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் இந்தி மொழி என மத்திய அமைச்சர் கூறியதாகத்தான் படித்தேன். மற்றப்படி ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி மொழி என அவர் கூறியதாக எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " முதல்வர் ஸ்டாலின், தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக செயல்படுகிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பழைய ஆட்சியாளர்களைக் குறை கூறிக் கொண்டு இருப்பதனால் எந்த பயனும் இல்லை. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். எனவே, உடனடியாக மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து ஏப்ரல் 11-ம் தேதி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது. அது நல்ல தீர்ப்பாக வரும் என நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in