அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு இருப்பதாக எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக குற்றம் சாட்டி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "மாபெரும் மக்கள் இயக்கமாம் அதிமுகவில் தற்போது நிலவி வரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மகளிர் அணியினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற போது தேனாம்பேட்டை வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தென்சென்னை வடக்கு( கிழக்கு) மாவட்ட இணைச்செயலலாளர் கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் தீக்குளிக்க முயன்ற கேசவன் மீது இந்திய தண்டணைச்சட்டம் 309-ன் பிரிவின் கீழ் அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in