"அரசியலுக்கு தோனி வர வேண்டும்" என்று மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
நடந்து முடிந்த 16-வது ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர்ந்து 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற தோனிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அவரது ரசிகர்கள் தோனியை கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து, அணியின் கேப்டன் தோனி, ரசிகர்களின் அன்புக்காக தான் இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். தோனியின் விருப்பத்திற்கு அவரது ரசிகர்களின் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மகேந்திர குழும தலைவர் ஆனந்த மகேந்திரா பரபரப்பு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தோனியின் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், எனினும் தோனி அரசியலில் களம் காண வேண்டுமென தான் விரும்புவதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டாவின் தலைமையிலான என்.சி.சி ஆய்வுக் குழுவில், தோனியுடன் தான் பணியாற்றியதையும் ஆனந்த் மகேந்திரா குறிப்பிட்டுள்ளார்.