`ஈபிஎஸ்சை இனி காப்பாற்றவே முடியாது'- அடித்துச் சொல்லும் டி.டி.வி.தினகரன்

டி டி வி தினகரன்
டி டி வி தினகரன்

``நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் இறைவனே நினைத்தாலும் ஈபிஎஸ் தண்டனை பெறுவதில் இருந்து காப்பாற்ற முடியாது'' என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று தஞ்சாவூருக்கு வந்திருந்த தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அ.தி.மு.க பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கில் நீதியரசர் ஜெயச்சந்திரன் புரட்சித் தலைவரின் சட்டதிட்ட விதிகளின் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளார். சரியான தீர்ப்பு. எனக்கு தெரிந்த சட்ட அனுபவப்படி அதுதான் உச்சநீதிமன்றத்திலும் தொடரும்.

எனக்கு யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிசாமியுடன் எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. அவருடைய குணாதிசயங்களை தான் கண்டிக்கிறேன். நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து இறைவனே நினைத்தாலும் தப்ப முடியாது'' என்றார்.

பன்னீர்செல்வம் கூறிய கருத்தை ஏற்கனவே வரவேற்றுள்ளேன். அதே சமயம் சுவாசமே துரோகமாக கொண்டவர்கள் நல்ல விஷயங்களுக்கு ஒத்துவர மாட்டார்கள். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான், தீய சக்தியான திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற முடியும் என்ற நோக்கத்தில் பன்னீர்செல்வமும் வைத்தியலிங்கமும் கூறிய கருத்தை வரவேற்கிறேன்.

துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால்தான் இவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். வைத்திலிங்கம் ஆரம்பத்தில் இருந்து உள்ளார். என்னை அதிமுகவிலிருந்து வெளியேற்றிய பிறகும் அவர் தொடர்ந்து கட்சியில் இருப்பதால், அங்கு நடந்த விஷயங்கள் அவருக்கு தெரியும். எனவே வைத்திலிங்கம் நேரம் வரும்போது கூறுகிறேன் என கூறியதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் ஒரு அணியை போல் செயல்படுவோம். சமூக நலத் திட்டங்கள் மக்களுக்கு நல்லது. அதே நேரத்தில் ஆட்சிக்கு வருவதற்காக, மக்களை ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் ஒரு அணியை போல் செயல்படுவோம். சமூக நலத் திட்டங்கள் மக்களுக்கு நல்லது. அதே நேரத்தில் ஆட்சிக்கு வருவதற்காக, மக்களை ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள் என உச்ச நீதிமன்றம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து மக்கள் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால் மக்களை ஏமாற்றும் விதமாக, செயல்படுகின்றனர். இதற்கான பலனை திமுக நாடாளுமன்ற தேர்தலில் அனுவிப்பார்கள்.

யார் எந்த தவறு செய்தாலும் மன்னித்து விடலாம் நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க செயல். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. வருங்காலங்களில் அதற்கு மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள்" என்று தினகரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in