பாஜகவுடனான கூட்டணியை எதிர்த்த மாநில தலைவர் நீக்கம்... தேவகவுடா அதிரடி!

பாஜகவுடனான கூட்டணியை எதிர்த்த மாநில தலைவர் நீக்கம்... தேவகவுடா அதிரடி!

பாஜக கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய மதசார்பற்ற ஜனதா தளம் கர்நாடகா மாநில தலைவர் இப்ராஹிமை அக்கட்சி நிறுவனர் தேவகவுடா நீக்கியுள்ளார். அந்த பதவியை முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு வழங்கினார்.

2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கர்நாடகாவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சமீபத்தில் இணைந்தது. 'ம.ஜ.த.,வின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அக்கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்தார். இதனை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவகவுடாவும் உறுதிப்படுத்தினார். இதற்கு அக்கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது.

குமாரசாமி மோடி
குமாரசாமி மோடி

ம.ஜ.த மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம்.இப்ராஹிம், 'பாஜகவுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. குமாரசாமி இந்த விவகாரத்தில் திட்டமிட்டே என்னை புறக்கணித்துள்ளார். எனது தலைமையிலான ம.ஜ.த., பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. தேவகவுடாவும் குமாரசாமியும் பாஜகவுடன் கூட்டணி வைத்து கட்சியைப் பலி கொடுத்துவிட்டனர். எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ம.ஜ.த எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்' என அறிக்கை வெளியிட்டார்.

பாஜக கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய இப்ராஹிமை கட்சியில் இருந்து தேவகவுடா நீக்கினார். மேலும், தனது மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியை அவர் மாநில தலைவராக நியமித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in