துணைமுதல்வர் மனைவிக்கு 2 ஆண்டாக ஆபாசத்தொல்லை: 53 ஃபேஸ்புக் கணக்குக் தொடங்கி டார்ச்சர் செய்த பெண் கைது

அம்ருதா
அம்ருதா

துணை முதல்வர் மனைவிக்கு 2 ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவு செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ். இவரது மனைவி அம்ருதா(43). இவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அம்ருதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய, ஆபாசமான கருத்துக்கள் சில கணக்குகளால் பதிவு செய்யப்பட்டு வந்தன..

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த பதிவுகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அம்ருதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச கருத்துக்களை தெரிவித்த பெண்ணை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். ஸ்மிருதி பன்சால்(50) என்ற அந்த பெண் அம்ருதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெவ்வேறு போலி ஃபேஸ்புக் கணக்குகள் மூலம் பதிவு செய்துள்ளது தெரிய வந்தது.

போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ஸ்மிருதி பன்சால் வெவ்வேறு பெயர்களில் ஃபேஸ்புக்கில் போலியாக 53 கணக்குகளை உருவாக்கியுள்ளார். மேலும், 13 மெயில் கணக்குகளையும் உருவாக்கியுள்ளார். தான் உருவாக்கிய 53 போலி கணக்குகள் மூலம் வெவ்வேறு பெயர்களில் துணை முதல்வரின் மனைவி அம்ருதா ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in