தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையைப் பறிப்பதா? - 12 மணி நேர வேலைக்கு எதிராகக் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!

தமிழக அரசு
தமிழக அரசுதொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை பறிப்பதா? - 12 மணி நேர வேலைக்கு எதிராக கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!

உலகத் தொழிலாளர்கள் கடுமையாகப் போராடி பல உயிர்களைப் பலி கொடுத்து பெற்ற உரிமையான 8 மணி நேர வேலை என்ற உரிமையைத் திமுக அரசு பறித்துச் சட்டம் இயற்றி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரித்துத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கொண்டு வந்த திருத்தச் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியுள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தனது கடும் கண்டனத்தைப் பதிவுச் செய்துள்ளது.

இதுத்தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’2020-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் நலச்சட்டங்கள் 23ஐ ஒருங்கிணைத்து 4 சட்டங்களாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியபோது திமுக அதனைக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தது. ஆனால் தற்போது தமிழக அரசு மத்திய அரசைப் பின்பற்றி, தமிழகத் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற தொழிலாளர்களுக்கு எதிரான கருப்புச் சட்டத்தைச் சட்டப்பேரவையில் இயற்றியுள்ளது.

உலகத் தொழிலாளர்கள் கடுமையாகப் போராடிப் பல உயிர்களைப் பலிக்கொடுத்துப் பெற்ற உரிமையான 8 மணி நேர வேலை என்ற உரிமையைத் திமுக அரசு பறித்துச் சட்டம் இயற்றி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் உழைப்பாளி மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு விடியல் வரும் என்ற நம்பிக்கையில் திமுகவை அரியணையில் அமர வைத்துள்ளனர். உழைப்பாளி மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வண்ணம் முதலாளிகளுக்கு ஆதரவான இந்தச் சட்டத்திற்கு ’நெகிழ்வு தன்மை’ என்ற புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து இருக்கும் திமுக அரசு இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in