மெகா ப்ளான்... அதிமுக மாநாட்டுக்கு தனி செல்போன் டவர்! மத்திய அமைச்சரை நெருக்கும் அதிமுக!

அதிமுக மாநாட்டு பந்தல்
அதிமுக மாநாட்டு பந்தல்

இம்மாதம் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாட்டிற்காக தனியாக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டுமென மத்திய அமைச்சரிடம் அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனையொட்டி தடையில்லா சேவைக்காக அங்கு தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என அதிமுக சார்பில் ம்த்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை டெல்லியில் நேற்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து இது குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in