கிழக்குப் பகுதி மக்களின் தனி மாநிலக் கோரிக்கை தவறல்ல: நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ அதிரடி

கிழக்குப் பகுதி மக்களின் தனி மாநிலக் கோரிக்கை தவறல்ல: நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ அதிரடி

மாநிலத்தின் கிழக்குப் பகுதி மக்களின் தனி மாநிலக் கோரிக்கை தவறல்ல என்று நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ தெரிவித்துள்ளார்

கிழக்கு நாகாலாந்து பகுதி என்பது மோன், டுயென்சாங், கிஃபிர், லாங்லெங், நோக்லாக் மற்றும் ஷமடோர் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் சாங், கியாம்னியுங்கன், கொன்யாக், போம், சாங்டம், திகிர் மற்றும் யிம்கியுங் ஆகிய ஏழு பழங்குடியினர் வசிக்கின்றனர். ​​கிழக்குப்பகுதியை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (ENPO) ஹார்ன்பில் பழங்குடியின திருவிழாவில் பங்கேற்க போவதில்லை என முடிவு செய்துள்ளது. தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஒரு விழாவில் கலந்துகொண்ட நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ பதிலளிக்கையில், "நாகாஸ், நாங்கள் எங்கள் மனதில் இருந்து பேசுகிறோம். கிழக்கு நாகாலாந்து மக்களின் சிந்தனை மற்றும் விருப்பம் என்ன என்று கூறுவதில் தவறில்லை, ஆனால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.

நாங்கள் அந்த மக்களுடன் பேசுகிறோம். மத்திய உள்துறை அமைச்சர் மாநிலத்திற்கு வரும்போது, அவரை சந்திக்க கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்புக்கு வாய்ப்பு கொடுப்போம். பிரதமரும் வந்தால் அவருடன் பேசுமாறும் நாங்கள் அந்த அமைப்பைக் கேட்டுக்கொள்வோம்" என்று கூறினார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கிழக்கு நாகாலாந்தில் தனி மாநிலத்திற்கான கோரிக்கை வலுவடைந்துள்ளது. தனி மாநிலக் கோரிக்கை நிறைவேறும் வரை எந்தத் தேர்தலிலும் பங்கேற்க வேண்டாம் என்ற அழைப்பினை அப்பகுதியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் ஆதரித்துள்ளனர்.

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு 2010 ம் ஆண்டு முதல் தனிமாநிலம் கோரி வருகிறது. நாகாலாந்து மாநிலமாகி 58 ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும், தங்கள் பகுதிகளில் அரசாங்கம் அலட்சியம் காட்டுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை 2023 சட்டசபை தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் பங்கேற்க மாட்டோம் எனவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in