டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றப்போவது யார்? - வாக்குப்பதிவு தொடங்கியது

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இப்போது தேர்தல் நடக்கிறது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தலா 250 வார்டுகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 247 வார்டுகளில் போட்டியிடுகிறது. 13,638 வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக சுமார் 40 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in