ஆம் ஆத்மி எழுச்சி - டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!

ஆம் ஆத்மி எழுச்சி - டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.

டிசம்பர் 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 129 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாநகராட்சியை கைவசம் வைத்திருந்த பாஜக 105 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், இதர கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளின் தலைவர்களுமே தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in