'என்னை கைது செய்யவேண்டும் அல்லது பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும்': மணீஷ் சிசோடியா பாய்ச்சல்!

'என்னை கைது செய்யவேண்டும் அல்லது பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும்': மணீஷ் சிசோடியா பாய்ச்சல்!

இன்னும் 4 நாட்களில் சிபிஐ என்னைக் கைது செய்ய வேண்டும் அல்லது என் மீதான வழக்குகள் மற்றும் ஸ்டிங் ஆபரேஷன் போலியானது என்பதை பாஜக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் வெளியான பாஜகவின் புதிய ஸ்டிங் ஆபரேஷன் குறித்து பதிலளித்த டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியா முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சிபிஐக்கு சவால் விடுத்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா, “செப்டம்பர் 19 ம் தேதிக்குள் சிபிஐ என்னை காவலில் எடுக்க வேண்டும் அல்லது ஸ்டிங் ஆபரேஷன் போலியானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் . முதலில் என் வீட்டில் சிபிஐ எதுவும் கண்டு பிடிக்கவில்லை, அமலாக்கத்துறை விசாரணை நடத்தியும் எதுவும் கண்டு பிடிக்கவில்லை.இப்போது ஸ்டிங் ஆபரேஷனைக் கொண்டு வந்துள்ளனர். இந்த ஸ்டிங் வீடியோவை இன்றே சிபிஐ வசம் ஒப்படைக்க பாஜகவை வலியுறுத்த விரும்புகிறேன். சிபிஐ விசாரணை நடத்தி நான்கு நாட்களுக்குள் இந்த வீடியோ உண்மை என்றால் என்னைக் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் பாஜகதான் இந்தக் குற்றத்தை செய்துள்ளது என ஒப்புக்கொள்ளவேண்டும்.

இது பாஜக அலுவலகத்தில் நடந்த பிரதமரின் மற்றொரு சதி என்பது உங்களுக்குத் தெரியும். இப்போதெல்லாம், மாநில அரசுகளைக் கவிழ்க்கவும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு மற்றும் ஸ்டிங் ஆபரேஷன் செய்யவும் அங்கு நாள் முழுவதும் சதிகள் தீட்டப்படுகின்றன.

வீடியோ போலியானது என நிரூபிக்கப்பட்டவுடன், போலியான சோதனை நடத்தியதற்காகவும், சிபிஐயால் அதை அங்கீகரிக்க முடியவில்லை என்பதற்காகவும் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in