கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை: ஹைதராபாத்தில் பரபரக்கும் 'ரெய்டு டிடர்ஜென்ட்' போஸ்டர்கள்

சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதா
சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதாகவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை: ஹைதராபாத்தில் பரபரக்கும் 'ரெய்டு டிடர்ஜென்ட்' போஸ்டர்கள்

பிஆர்எஸ் தலைவரும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமாகிய கவிதாவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தும் நிலையில், மத்திய ஏஜென்சிகளின் ரெய்டைத் தொடர்ந்து பாஜகவில் சேர்ந்த தலைவர்களின் படங்களை ஒப்பிட்டு ஹைதராபாத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதாவிடம் அமலாக்கத்துறை இன்று டெல்லியில் விசாரணை நடத்தியது. இதற்கு பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், இதற்கு முன்பாக பல்வேறு வழக்குகளில் மத்திய ஏஜென்சிகளின் விசாரணையை எதிர்கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பல்வேறு மாநில அரசியல்வாதிகளை குறிப்பிட்டு ஹைதராபாத்தில் பல இடங்களில் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்களில், அசாமின் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, மத்திய பிரதேசத்தின் ஜோதிராதித்ய சிந்தியா போன்ற அரசியல்வாதிகளின் ஆடைகள் 'ரெய்டு டிடர்ஜென்ட்'க்கு பிறகு காவி நிறமாக மாறியதாகவும், அதே நேரத்தில் கவிதாவின் ஆடைகளின் நிறம் பாதிக்கப்படாமல் உள்ளது என்றும், 'பை பை மோடி' என்று அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதா
சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in