விசிகவிற்கு பானை சின்னம் கிடைக்குமா?... டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

பானை சின்னத்துடன் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
பானை சின்னத்துடன் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலைக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

திருமாவளவன், ரவிக்குமார்
திருமாவளவன், ரவிக்குமார்

இந்த நிலையில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இருப்பினும் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஏற்கெனவே கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பானை சின்னத்தில் போட்டியிட்டு விசிக வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். இதனால் இந்த முறையும் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், இந்த கோரிக்கை மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

இந்த நிலையில் பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அதனை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்றே முடிவு எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டிருந்த மனுவிற்கு பதிலாக, புதிய மனுவை தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in