டெல்லியில் அண்ணா அறிவாலயம்: 2-ம் தேதி திறந்துவைக்கிறார் ஸ்டாலின்!

டெல்லியில் அண்ணா அறிவாலயம்: 2-ம் தேதி திறந்துவைக்கிறார் ஸ்டாலின்!

நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து குறைந்தது 7 எம்.பி-க்களைப் பெற்ற, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய - மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்குவது என்று கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவுசெய்தது. இதன்படி டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில், திமுகவுக்குக் கடந்த 2013-ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் திமுக அலுவலகக் கட்டுமானப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்துவந்தன.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், வருகிற ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி அண்ணா அறிவாலயத்தைத் தமிழக முதல்வரும், திமுகவின் மூன்றாவது தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்று முதன்முறையாக டெல்லி சென்றபோதே இந்த அலுவலகக் கட்டுமானப் பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.