கவிதாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி... நீதிமன்றம் உத்தரவு!

கவிதா
கவிதா

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான தெலங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினர் கவிதாவை, வரும் 23ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவிதா
கவிதா

தெலங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினரும் (எம்எல்சி), பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமானவர் கவிதா. கடந்த 2021-22ம் ஆண்டிற்கான டெல்லி கலால் கொள்கையின் கீழ், பெரிய அளவிலான பங்கு வகிக்கும் மதுபான வர்த்தகர்களின் 'சவுத் குரூப்' லாபியுடன் கவிதாவுக்கு தொடர்புகள் உள்ளதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து நேற்று ஹைதராபாத்தில் உள்ள கவிதா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். பின்னர் கவிதாவை அதிகாரிகள் கைது செய்ததால், பிஆர்எஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிஆர்எஸ் எம்எல்சி கவிதா
பிஆர்எஸ் எம்எல்சி கவிதா

இந்த கைது சம்பவத்தை கண்டித்து தெலங்கானாவில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கவிதாவை, இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். மதுபான கொள்கை மோசடி வழக்கு தொடர்பாக கவிதாவிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், கவிதாவை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க 7 நாட்கள் மட்டுமே அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், வரும் 23ம் தேதி அன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!

செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!

குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!

பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in