அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: களத்தில் குதித்தது டெல்லி காங்கிரஸ்

டெல்லி காங்கிரஸ்
டெல்லி காங்கிரஸ்அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: களத்தில் குதித்தது டெல்லி காங்கிரஸ்

துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகக் கோரி, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி கட்சியின் டிடியு மார்க் அலுவலகம் அருகே அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகக்கோரி நடந்தப் போராட்டத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், டெல்லி மாநில பிரிவு தலைவர் அனில் சவுத்ரி தலைமையில் ஒன்றுதிரண்டு கேஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கேஜ்ரிவால் ஆட்சியில் இருக்கும் வரை நியாயமான விசாரணைக்கு சாத்தியமில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டுப் பேசிய அனில் சவுத்ரி, "ஒட்டுமொத்த டெல்லி அரசும் ஊழலில் மூழ்கியுள்ளது. கேஜ்ரிவால் ஆட்சியில் இருக்கும் வரை, மதுபான ஊழல் வழக்கில் சுதந்திரமான விசாரணை நடத்தப்படாது, எனவே, அவரும் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறினார்.

இதற்கிடையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித், லெப்டினன்ட் கவர்னர் வி கே சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "இந்த வழக்கில் உபா, எப்பியு போன்ற சட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் தேசத்துரோகம் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளை நிர்வகிக்கும் சட்டங்களின் கீழ் விசாரிக்க சிபிஐ மற்றும் என்ஐஏவை வழிநடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in