`ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டுவந்தால் 1 கோடி பரிசு'- ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்து அமைப்பு நிர்வாகி கைது

இந்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணன்
இந்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணன்

திமுக எம்பி ஆ.ராசாவின் நாக்கை அறுத்து கொண்டுவந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இந்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அன்னிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக எம்பி ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம். இந்துக்களை விபசாரிகள் எனக் கூறிவரும் ஆ.ராசாவின் நாக்கை அறுத்து கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ரூபாய் ஒரு கோடியும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணனை உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in