`வேலுமணிக்கு களங்கம் விளைவிக்கும் கருத்து சொல்லவில்லை'- அமைச்சர் கே.என்.நேரு மீதான அவதூறு வழக்கு ரத்து

`வேலுமணிக்கு களங்கம் விளைவிக்கும் கருத்து சொல்லவில்லை'- அமைச்சர் கே.என்.நேரு மீதான அவதூறு வழக்கு ரத்து

தமிழக அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முதன்மைச் செயலாளரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, கடந்த 2020-ம் ஆண்டு கோவையில் பேசிய போது, இன்னும் 11 மாதங்களில் அமைச்சர் வேலுமணி கோவை சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார். இது அமைச்சரின் பணி குறித்து களங்கம் கற்பித்ததாக கூறி, நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை எனவும், வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறி, அமைச்சர் நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in