ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு குழந்தை பிறந்தது: மிரட்டல்கள் வருவதாக புகார்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு குழந்தை பிறந்தது: மிரட்டல்கள் வருவதாக புகார்!

ஜெயலலிதாவின் வாரிசான தீபாவிற்கு வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா.  இவரின் கணவர் மாதவன்.  இவர்களுக்குத் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அதற்குப் பல வருடங்களாகவே சிகிச்சை பெற்று வந்துள்ளனர். பல முறை குழந்தை பிறப்பதில் சிக்கல் நீடித்து வந்திருக்கிறது. இந்நிலையில் தீபாவிற்கு வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தீபா கூறுகையில், “5 வருடச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது எனக்குக் குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு முன்பு பலமுறை கருத்தரித்த நிலையிலும் அப்போது குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் இருந்தன. இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாமல் இருந்தது. பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளதால், கவனமாக வளர்க்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனக்கும், கணவர் மாதவனுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல்கள் வருகின்றன. இதனால் உறவினர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு குழந்தை பிறந்தது தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க இருக்கிறேன்”  என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in