சசிகலா மீது ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பரபரப்பு குற்றச்சாட்டு!

சசிகலா மீது ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பரபரப்பு குற்றச்சாட்டு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தீபா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பித்துக் கொள்ளும் விதமாக தீபக் பேசுவதாக கூறியுள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், "கடந்த சில நாட்களாக எனது சகோதரர் தீபக் தந்தி டிவி தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்ததாக சில தகவல்கள் இப்போது நான் பார்த்து தெரிந்துவிட்டேன். அதில் தீபக் ஒரு கருத்து சொல்லி இருக்கிறார். நடராஜர் அவர்களை நான் பேசியிருப்பதினால் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 2011ல் அத்தை அவர்கள் இந்த குடும்பத்தை வெளியேற்றிய காரணத்தினால் நான் என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவு வந்து கொண்டிருக்கிறேன். இதற்கான முழு ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் 5 ஆண்டு காலம் நடந்து முடிந்த பிறகு ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, மேற்கொண்டு விசாரணை தேவை மேற்கோள் காட்டுகிறது என்றால் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என்பது ஊர்ஜிப்படுத்தப்பட்டுள்ளது. எனது சகோதரர் தீபக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர் போவதாக ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார். இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான். அதாவது, சொந்த குடும்பம் என்று பாராமல் எந்த பாசமும் ஒரு அக்கறையும் இல்லாமல் சசிகலா என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக பேசிக்கொண்டு இருப்பது கொஞ்சம் வருத்தத்தை அளிக்கிறது. என்னால் இந்த மிகப்பெரிய பவர் சென்டரா இருந்த சசிகலா நடராஜன் குடும்பத்தில் என்னால் எதையும் சாதிக்க முடியவில்லை. எங்க குடும்பத்துக்குள்ள புகுந்த சசிகலா, நடராஜன், இளவரசி, விவேக், பிரியா, ஜெயராமன், டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் யார். இவர்கள் எல்லாேரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள். தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?.

என்னுடைய அத்தை இறந்ததைக்கூட எனக்கு தகவல் தெரிவிக்காமல், இறுதி சடங்கில்கூட பங்கேற்க விடாமல் தடுத்தனர். எங்க அப்பா ஜெயக்குமார், எங்கம்மா விஜயலட்சுமி, எங்க அத்தை ஜெயலலிதா, சகோதரியாகிய நான் ஆகியோருக்கு துரோகம் செய்துவிட்டு, கேடு விளைவித்துவிட்டு, இப்போது தீபக், சசிகலா சொல்வது எல்லாம் கேட்டுக்கொண்டு நடப்பது எதனால் என்று எனக்கு தெரியவில்லை. இது காலம் தான் விளக்க வேண்டும். அதை தவிர, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் விதமாக தீபக் பேசுவது வெட்ட வெளிச்சமாக தெரிந்திருக்கிறது.

தமிழக அரசு இதை கையில் எடுத்துக் கொண்டு நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அதிமுக தொண்டர்களும் சரி, தமிழக மக்களும் சரி, சொந்த குடும்ப உறுப்பினராக இருந்த நானும் சரி, எங்களுக்கெல்லாம் உண்மையாக என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. எந்த தவறும் சசிகலா செய்யவில்லை என்று முதலில் நிரூபணம் ஆகட்டும். உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். இந்த விசாரணையை யாருக்காகவும் எதற்காகவும் கைவிடக்கூடாது. தமிழக அரசு அத்தையோட மரணத்திற்கு நியாயம், நீதி கிடைத்தே ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in