`அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் சட்ட விரோதம் என அறிவிக்கவும்'- தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

ஓபிஎஸ்
ஓபிஎஸ் `அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் சட்ட விரோதம் என அறிவிக்கவும்'- தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் என்றும் தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று திடீரென மனுத்தாக்கல் செய்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று கடிதம் எழுதி இருக்கிறார். அதில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் என்றும் தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் கூறியிருக்கிறார். மேலும் வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள ஓபிஎஸ், அதிமுக பொது குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற ஆணையை கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை அங்கீகரிக்கக் கூடாது எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in