தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணை வளையத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணை வளையத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் உட்பட நான்கு காவலர்கள் மற்றும் 3 வட்டாட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிக் கடந்த 22.05.2018 தேதியில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 3,000 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

அதில் சில காவல்துறையைச் சேர்ந்த 17 பேர் மீதும், வருவாய்த்துறையைச் சேர்ந்தவர்கள் மீதும் ஆணையம் விசாரணை செய்யப் பரிந்துரை செய்திருந்தது.  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் உட்பட நான்கு காவலர்கள் மற்றும் மூன்று வட்டாட்சியர்கள் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கத் தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in