
திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில செயலாளர் மீது 3 பிரிவுகளில் சாத்தான்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரது இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திமுக பிரமுகர் திலகர் என்பவருக்கு சொந்தமான தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பாஜகவின் மாநில செயலாளர் பூபதி என்பவர் டொனேஷன் கேட்டு தராததால் ஆலையின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திமுக பிரமுகரான ஆலை உரிமையாளர் திலகர் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பாஜகவின் மாநில செயலாளர் பூபதி மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து இரண்டு விலை உயர்ந்த சொகுசு கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.