`திமுக பிரமுகரால் என் உயிருக்கு ஆபத்து'- சென்னை காவல் ஆணையரிடம் சி.வி.சண்முகம் புகார்

`திமுக பிரமுகரால் என் உயிருக்கு ஆபத்து'- சென்னை காவல் ஆணையரிடம் சி.வி.சண்முகம் புகார்

அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்திற்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலமாகவும், வீடியோ பதிவு மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் சக்திவேல் என்பவர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பரப்பி வருகிறார். சக்திவேல் பதிவிட்ட வீடியோவில் சி.வி.சண்முகத்தை தரக்குறைவாக பேசியதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோவால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சி.வி.சண்முகத்திற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதுடன் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு செல்போன் எண்களில் இருந்து ரவுடி மற்றும் குண்டர்களால் சி.வி.சண்முகம் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி, கொலை மிரட்டல் விடுத்து குறுஞ்செய்திகள் வந்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி சி.வி.சண்முகத்தின் தலையை தோரணம் கட்டி தொங்க விடுவோம் என மிரட்டல் விடுத்து வந்த குறுஞ்செய்தி தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in