துயரச் செய்தியைக் கேட்டு துடித்து துடித்துப் போனேன்...வேணு மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வேணு மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கே.வேணு
கே.வேணு

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘’திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு துடித்து துடித்துப் போனேன். மிசாவை நெஞ்சரத்தோடு எதிர்கொண்டு சிறை சென்ற போராளி கி.வேணு. அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in