மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன்

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன்

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை இறந்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கைலாசபட்டியில் சிறுத்தை இறந்து கிடந்தது அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது. இதனால் சிறுத்தை இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் உள்ள நில உரிமையாளர்கள் என மூன்று பேருக்கு வனத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுபபினர் என்பதால் மக்களவை சபாநாயகரிடம் அவரை விசாரிக்க வனத்துறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது.

இதன்படி, சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி ரவீந்திரநாத் எம்.பி உள்பட மூன்று பேரில் 2 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in