காங்கிரஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏ-க்களுக்கு சீட் வழங்கியது பாஜக... இமாச்சலில் பரபரப்பு!

பாஜகவில் இணைந்த தகுதி நீக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏக்கள்
பாஜகவில் இணைந்த தகுதி நீக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏக்கள்

இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பளித்துள்ளது.

சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் கட்சி மாறி வாக்களித்ததால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால், பாஜகவுக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக முடிவு செய்யப்பட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

பாஜக காங்கிரஸ்
பாஜக காங்கிரஸ்

இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சுதிர் சர்மா, ரவி தாக்கூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லகன்பால், சேதன்யா சர்மா மற்றும் தேவிந்தர் குமார் பூட்டோ ஆகியோர் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். மேலும் இமாச்சல பிரதேசத்தின் 3 சுயேட்சைகளும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வெளியான இமாச்சல பிரதேச இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில், தரம்ஷாலா தொகுதிக்கு சுதிர் சர்மா, லாஹவுல் மற்றும் ஸ்பிதி தொகுதிக்கு ரவி தாக்கூர், சுஜான்பூருக்கு ராஜிந்தர் ராணா, பர்சார் தொகுதியில் இந்தர் தத் லகன்பால், காக்ரெட் தொகுதியில் சைதன்யா சர்மா, குட்லேஹரில் தேவிந்தர் குமார் பூட்டோ ஆகியோரை பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இந்த தொகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பாஜக
பாஜக

மொத்தம் 68 உறுப்பினர்களை கொண்ட்ட இமாச்சல் சட்டப்பேரவையில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தற்போது 62 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ஆளுங்கட்சியின் பலம் 39ல் இருந்து 33ஆக குறைந்துள்ளது. பாஜகவுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ததால், சட்டசபையின் பலம் மேலும் குறைந்துள்ளது. எனவே இந்த இடைத்தேர்தல் காங்கிரஸுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in