தமிழகத்தின் அனுமதியின்றி மேகேதாட்டுவில் அணைகட்ட முடியாது: ஓபிஎஸ் திட்டவட்டம்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்தமிழகத்தின் அனுமதியின்றி மேகேதாட்டுவில் அணைகட்ட முடியாது: ஓபிஎஸ் திட்டவட்டம்!
Updated on
1 min read

தமிழக அரசின் அனுமதியின்றி மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணைகட்ட முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்போவதாக கர்நாடக அரசு கடந்து சில ஆண்டுகளாக கூறி வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி நீரை நம்பியிருக்கும் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு தமிழக விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசும் இந்த தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில், மேகேதாட்டுவில் அணைகட்ட நிதி ஒதுக்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடாகாவில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ள நிலையில் அதன் துணை முதல்வராக பொறுப்பேற்ற டி.கே. சிவக்குமார் அம்மாநில நீர் பாசனத்துறை அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய டி.கே.சிவக்குமார், மேகே தாட்டுவில் அணை தொடர்பான பணிகளைத் துவக்க ஆலோசித்ததாகவும், இது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று அனுமதி பெற போவதாகவும் தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசினால் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. தமிழகத்தில் உள்ள 3 மருத்துவக்கல்லூரிகளில் சில குறைபாடுகள் உள்ளதால் அதன் அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. குறைபாடுகளைச் சரி செய்தால் மீண்டும் அங்கீகாரம் கிடைக்கும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in