`இந்த 2 மணி நேரம் மட்டும் பேருந்து பயணத்தை தவிர்க்கவும்'- மக்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

`இந்த 2 மணி நேரம் மட்டும் பேருந்து பயணத்தை தவிர்க்கவும்'- மக்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

மேன்டூஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில் பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `முதல்வரின் அறிவுறுத்தலின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக மேன்டூஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. மேலும் அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடன் தொடர்பில் இருந்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். மேன்டூஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில் பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும் முறை கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in