பொதுக்குழு மேடையில் சி.வி.சண்முகம்- கே.பி.முனுசாமி திடீர் மோதல்: என்ன காரணம்?

பொதுக்குழு மேடையில் சி.வி.சண்முகம்- கே.பி.முனுசாமி திடீர் மோதல்: என்ன காரணம்?

ஓபிஎஸ்சை உடனடியாக நீக்க வேண்டும் எனப் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்த நிலையில், ‘ஓபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும்’ என கே.பி. முனுசாமி தெரிவித்தார். இதனால் கே.பி.முனுசாமிக்கும், சி.வி. சண்முகத்திற்கும் மேடையிலேயே கடுமையான மோதல் ஏற்பட்டது.

சென்னை, ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவிக்கு நான்கு மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பொருளாளருக்கு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரவு செலவுகளை ஆராய்தல், நிர்வகித்தல், வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடவும், கடன் விவகாரம் ஆகியவற்றில் ஈடுபடவும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அதிகாரமும் பொதுச் செயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை இப்போதே கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். பொதுக்குழு உறுப்பினர்களும் இதில் உறுதியாக இருந்தனர். அப்போது ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதை பொதுக்குழு மேடையில், தானே அறிவிக்க வேண்டும் என சொல்லி இருந்தாராம் சி.வி.சண்முகம். ஆனால், முந்திக்கொண்டு கே.பி.முனுசாமி அறிவித்ததால் சினம் கொண்டார் சி.வி.சண்முகம். இதையடுத்து பொதுக் குழு மேடையிலேயே சி.வி.சண்முகத்துக்கும் கே.பி.முனுசாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சி.வி.சண்முகத்தைச் சமாதானம் செய்த எடப்பாடி பழனிசாமி, அவரை இருக்கையில் அமரச் சொன்னார். இதையடுத்து இருக்கையிலிருந்து கொண்டே கே.பி.முனுசாமியை கடுமையாக விமர்சனம் செய்தார் சி.வி. சண்முகம். இதனால் பொதுக்குழுவில் சற்று நேரம் சலசலப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in