எம்ஜிஆர் நினைவிடத்தில் தனியாக வந்து அஞ்சலி செலுத்திய சி.வி.சண்முகம்: காரணம் என்ன?


எம்ஜிஆர் நினைவிடத்தில் தனியாக வந்து அஞ்சலி செலுத்திய சி.வி.சண்முகம்: காரணம் என்ன?

அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சரான எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். ஈபிஎஸ் வந்து சென்ற பிறகு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவரது ஆதரவாளர்களுடன் தனியாக வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சி.வி. சண்முகத்திற்கும், எடப்பாடி அணிக்கும் ஏதேனும் பிணக்கு ஏற்பட்டுள்ளதோ என பரபரப்பு தொற்றிக் கொண்டதுடன், பல்வேறு விதமான கருத்துக்களும் பரவ தொடங்கியது. சி.வி. சண்முகம் தனி அணியாக செயல்படுகிறாரோ என்ற கருத்துக்கள் பரவிய நிலையில், அது தொடர்பாக அவரிடமே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது, அது முற்றிலும் தவறானது என்று அவர் மறுத்துள்ளார். காலையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த போது டிராபிக்கில் மாட்டிக் கொண்டதாகவும், அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்துவதற்கு வந்து சேர முடியவில்லை என்றும், ஆனால் அதன் பிறகு நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் தானும் கலந்து கொண்டதாகவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

உறுதிமொழி ஏற்றபிறகு தான் மட்டும் தனியாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதாக குறிப்பிட்டுள்ள சி.வி.சண்முகம், தான் தனி அணியாக செயல்படுவது திட்டமிட்ட வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in